முதன்மைச் சேதி

பொத்துவில்-அருகம்பே பிரதேசத்தில் இஸ்ரேலியரின் சட்ட விரோத நிறுவனத்திற்கு உச்ச பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதனால் வெளிநாட்டு உல்லாச பிரயாணிகள், பொதுமக்கள், மீனவர்கள் மற்றும் விவசாயிகள் அச்சம் அடையும் நிலை உருவாகியுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை தெரிவிப்பு!
பொத்துவில் - அருகம்பே பிரதேசம் உல்லாசத்துறையில் முக்கியமான இடமாகவும், அமைதியான பிரதேசமாகவும் திகழ்கின்றது. இஸ்ரேல் நாட்டின் சட்டவிரோதமான நிறுவனம் ஒன்று பொத்துவில் - அருகம்பே பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ளதால் இதனைக் காரணம் காட்டி அமைதியாக இருந்த பொத்துவில் - அருகம்பே பிரதேசத்தில் அதி உச்ச பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள், பிரதேச மக்கள், மீனவர்கள், விவசாயிகளும் அச்சம் அடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த நிலமையை நீக்குவதற்கான எற்பாடுகளை ஜனாதிபதி மேற்கொள்ள வேண்டும் என பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் நேற்று(17.06.2025) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற போது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார்.
இஸ்ரேல் நிறுவனத்தினை பதிவு செய்யப்பட்ட பிரதேசத்திற்கு அனுப்பி பொத்துவில் - அருகம்பே பிரதேசத்தின் அமைதியை ஏற்படுத்துமாறு கேட்டுக் கொண்டதுடன் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு நாங்கள் எப்போதும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றோம். இந்த நிலையில் அருகம்பே பிரதேசத்தில் வழமையான நிலையை உருவாக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து உரையாற்றுகையில்…
கட்சித் தலைவர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு வழங்கும் பாரிய கடமை ஜனாதிபதி அவர்களுக்கு உள்ளது. கட்சித் தலைவர்களினதும் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் பாதுகாப்பு விடயத்தில் ஜனாதிபதி அவர்கள் விசேட கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான எனக்கு கடந்த பிரதேச சபைத் தேர்தல் காலத்தில் பிரசாரக் கூட்டத்திற்கு செல்லும் போது என்னைத் தாக்குவதற்கு சிலர் திட்டமிட்டிருந்தனர். நான் அக் கூட்டத்திலிருந்து வருகை தந்த பின்னர் எமது கட்சியில் அம்பாரை மாவட்ட செயலாளரை அந்தக் குழுவினர் தாக்கினர். எனவே, கட்சித் தலைவர்களுக்கும், பாதுகாப்புக் கோரும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அவர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையினை விடுத்தார்.
கட்சித் தலைவர்களுக்கும் , பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வழங்கும் விடயத்தில் கடந்த காலங்களில் முறை தவறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதனால்தான் எல்லோருக்கும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வழங்க முடியாத நிலைமை உருவாகியுள்ளது. ஆனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள கட்சித் தலைவர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வழங்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இது தொடர்பான செயற்பாடுகளை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் திரு.ஆனந்த விஜயபால அவர்களை முன்னெடுக்குமாறும் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாணத்தில் பொத்துவிலிருந்து திருகோணமலை வரையிலான ஆழ்கடல் மீனவர்கள் 4 இலட்சம் செலவு செய்து மீன் பிடிக்கச் செல்கின்ற போது கடல் கொள்ளையர்கள் அம் மீனவர்களது பெறுமதியான மீன்களையும், வலைகளையும் திருடி கொள்ளையடிக்கின்றனர். இதனால் கிழக்கு மாகாண ஆழ்கடல் மீனவர் சமூகம் பாரிய நஷடமடைந்துள்ளனர். இது தொடர்பாக பாராளுமன்றத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் அவர்களினால் விசேட பிரேரனை கொண்டுவரப்பட்டு விவாதங்களும் நடைபெற்றன.
ஆழ்கடல் மீனவர்களின் மீன்களை கொள்ளையடித்து அப்பாவி ஏழை மீனவர்களின் வாழ்க்கையில் விளையாடும் கொள்ளைக்காரர்களை ஒழிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்ட கௌரவ பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் கே.பி.அநுர ஜயசேன அவர்களுக்கும், பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கும் கிழக்கு மாகாண மக்கள் சார்பில் நன்றிகளைத் தெரிவிப்பதுடன் கிழக்கு மாகாண மீனவர்களின் விடயத்தில் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சு அக்கரை செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இன்றைய ஜனாதிபதி அவர்கள் அன்று பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினராக எதிர்க்கட்சியில் பதவி வகித்து செயற்பட்டது போன்று எமது கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர்களும் நாட்டு மக்களுக்காக ஜனநாயக ரீதியில் செயற்பட்டு வருகின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.

சுமார் 242 பயணிகளுடன் லண்டன் நோக்கி புறப்பட்ட இந்தியன் எயார்லைன் விமானம் விபத்திர்குல்லாகும் காட்சியே இதுவாகும். அஹமதாபாத் விமானநிலையத்திலிருந்து ம...

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணியானது இரண்டு ஒரு நாள் போட்டிகளையும் வார்னர் - முரளி ஞாபகார்த்தமாக இரண்டு டெஸ்ட் போட்டிகளைய...

பொத்துவில்-அருகம்பே பிரதேசத்தில் இஸ்ரேலியரின் சட்ட விரோத நிறுவனத்திற்கு உச்ச பாதுகாப்பு வழங்கப்பட்டு...
June, 24 2025

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணியானது இரண்டு ஒரு நாள் போட்டிகளையும் வார்...
January, 29 2025